

ராயபுரம்
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரான இவர், தற்போது சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை தண்டையார்பேட்டை அஜீஸ் நகரில் தங்கராஜ், பாபு உள்ளிட்ட தி.மு.க.வினர் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தங்கராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர் சந்தானத்துக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது சந்தானம், தனது ஆதரவாளர்களான வேணு, ரவி ஆகியோருடன் சேர்ந்து தங்கராஜ், பாபு ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தானம், ரவி ஆகிய 2 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.