அண்ணாநகரில் தி.மு.க. பிரமுகர் கொலையில் ரவுடி கைது

அண்ணாநகரில் தி.மு.க. பிரமுகர் கொலையில் ரவுடி லெனினை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அண்ணாநகரில் தி.மு.க. பிரமுகர் கொலையில் ரவுடி கைது
Published on

சென்னை அண்ணாநகர், டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 48). தி.மு.க. பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கணவன், மனைவி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி லெனினை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அண்ணாநகர் பகுதியில் லெனின் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அண்ணாநகர் போலீசார் லெனினை பிடிக்க சென்றனர். போலீசாரை பார்த்த உடன் தப்பிக்க முயன்ற லெனின் மேம்பாலத்தின் மேலே இருந்து கீழே குதித்தார். இதில் காயம் அடைந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com