சென்னை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.67 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 550 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் தங்கம் பறிமுதல்
Published on

இலங்கை விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 6 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இ்ல்லை.

ரூ.68 லட்சம் தங்கம் பறிமுதல்

இதையடுத்து 6 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள், தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

6 பேரிடம் இருந்தும் ரூ.67 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 550 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரையும் கைது செய்து, அந்த தங்கத்தை யாருக்காக இலங்கையில் இருந்து கடத்தி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com