சேலம் கோட்டத்தில் ரூ.26 லட்சம் மோசடி செய்த ரெயில்வே ஊழியர் கைது

சூரமங்கலம், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தின் கணக்கு பிரிவில் பண முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சேலம் கோட்டத்தில் ரூ.26 லட்சம் மோசடி செய்த ரெயில்வே ஊழியர் கைது
Published on

அதில் கணக்கு பிரிவில் கணக்காளரின் உதவியாளராக பணியாற்றிய திருச்சியை சேர்ந்த பிராங்கிளின் பிரகாஷ், முறை கேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கோட்டம் முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்களின் தொழில்வரியை சம்பளத்தில் பிடித்தம் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தும் போது, சில பரிவர்த்தனைகள் திரும்பி வந்துள்ளது.

அந்த தொகையை அவரது சொந்த வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. இவ்வாறு மொத்தம் ரூ.26 லட்சம் கையாடல் செய்திருப்பது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிராங்கிளின் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் கோட்ட நிர்வாகம் புகார் செய்தது. அதன்பேரில் பிராங்கிளின் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com