ராமநத்தம் அருகே மணல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்

ராமநத்தம் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம் அருகே மணல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்
Published on

ராமநத்தம்,

ராமநத்தம் போலீசார் இன்று அதிகாலை அதர்நத்தம் கிராம சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர், போலீசாரை பார்த்ததும் சற்று முன்னதாக திரும்பிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மினிலாரியை விரட்டிச் சென்றனர். எழுத்தூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மினிலாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து பஞ்சரானது. உடனே மினிலாரியில் வந்தவர்கள், இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதனிடையே அங்கு வந்த போலீசார், மினிலாரியை சோதனையிட்டபோது, அதில் மணல் கடத்தி வந்ததும், போலீசாரை பார்த்ததும் மணல் கடத்தல் கும்பல் தப்பிச் செல்லும்போது டயர் பஞ்சரானதால், மினிலாரியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com