லாரியில் மணல் கடத்தல்; டிரைவர் கைது

நெல்லையில் லாரியில் மணல் கடத்தியதாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
லாரியில் மணல் கடத்தல்; டிரைவர் கைது
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீசார் சீனிவாச நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் எம்.சாண்ட் மணல் இருந்தது தெரிய வந்தது.

உடனே லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மேல கருங்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 47) என்பதும், நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு பகுதியில் இருந்து எம்.சாண்ட் மணலை லாரியில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் முருகனை கைது செய்து, அவரிடம் இருந்து மணலை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com