மொபட்டில் மணல் கடத்தல்; 2 பேர் கைது

சங்கரன்கோவிலில் மொபட்டில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மொபட்டில் மணல் கடத்தல்; 2 பேர் கைது
Published on

சங்கரன்கோவில்,

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் மேல மரத்தோணி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மொபட்டில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மேல மரத்தோணியை சேர்ந்த வேல்முருகன் மகன் காளிராஜ் (வயது 25), மூக்கையா மகன் ராமசந்திரன் (23) என்பதும், மொபட்டில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்திய மொபட்டை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com