திருவள்ளூர் ஈக்காடு ஊராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியில் உள்ள சுவேதா கார்டனில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் ஈக்காடு ஊராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா
Published on

விழாவுக்கு திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சரத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈக்காடு ஊராட்சி தலைவர் லாசனா சத்தியா, துணைத்தலைவர் குணசேகர் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் வார்டு உறுப்பினர்கள் ராஜன், பலராமன், மாரியம்மாள், தமிழ்ச்செல்வி, கனகவல்லி, சுகுமார், ராணி, விமலா, தேவி, சரவணன், ஜான்சன், ஊராட்சி செயலாளர் சரவணன்மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com