

தரகம்பட்டி,
கடவூர் வட்டம், மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவை தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஹேமாநளினி தொடங்கி வைத்து, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை தரகம்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் சுத்தம் செய்தனர். இதில், மைலம்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தாதேவி, மருத்துவமனை ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.