மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா
Published on

லாலாபேட்டை

லாலாபேட்டை அருகே உள்ள மகிளிபட்டி கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இதற்கு குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தவசெல்வம் தலைமை தாங்கினார். இதையடுத்து சாலையோரங்களில் நல்ல நிழல் தரும் வேம்பு, நாவல், பூவரசு, புங்கன் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடேஸ்வரன், மண்டல துணை தாசில்தார் மதியழகன், சிந்தலவாடி ஊராட்சித்தலைவர் வெண்ணிலா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com