பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 13). இவன், நந்தனம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் ஹரிஹரன், வீட்டில் உள்ள தனது அறைக்குள் சென்று படிப்பதாக கூறி கதவை பூட்டிக்காண்டான். அதன்பிறகு நீண்டநேரம் கதவை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தங்கள் மகன் ஹரிஹரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com