மண்டபத்தில் கடல் அட்டைகள் பறிமுதல்; ஒருவர் கைது

மண்டபம் கடலோர பகுதிகளில் கடல் அட்டைகள் பதுக்கப்பட்டு வருவதாக கடலோர போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மண்டபத்தில் கடல் அட்டைகள் பறிமுதல்; ஒருவர் கைது
Published on

பனைக்குளம்

மண்டபம் கடலோர பகுதிகளில் கடல் அட்டைகள் பதுக்கப்பட்டு வருவதாக கடலோர போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மண்டபம் பெட்ரோல் நிலையம் அருகில் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் சுமார் 60 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த மண்டபத்தை சேர்ந்த அப்துல் காதர்(வயது 23) என்ற வாலிபரை கைது செய்து, கடல் அட்டைகள் கடத்தி வந்து ஆட்டோவுடன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com