

விருதுநகர்,
விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் சுற்றுலாத்துறையின் தங்கும் விடுதியான தமிழ்நாடு ஓட்டல் உள்ளது. இந்த தங்கும் விடுதி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் இந்த தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக குத்தகை தொகை ரூ.44 லட்சம் செலுத்தாத நிலையில் நேற்று மதுரை மண்டல சுற்றுலா துறை அதிகாரிகள், விருதுநகர் தாசில்தார் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலையில் தங்கும் விடுதியை ஜப்தி செய்து அங்குள்ள பொருட்களை ஒரு அறையில் போட்டு சீல் வைத்தனர்.