கடலில் மிதந்து வந்த 23 கிலோ கஞ்சா பறிமுதல்

கடலில் மிதந்து வந்த 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலில் மிதந்து வந்த 23 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

கோட்டைப்பட்டினம், மே.29-
ஜெகதாப்பட்டினம் அருகே கடலில் மிதந்து வந்த 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலில் மிதந்து வந்த மூட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே அய்யம்பட்டினம் கிராமத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு மூட்டை மிதந்து வந்தது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த சுங்கத்துறை அதிகாரி வேல்முருகன் கடலில் மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தார். அப்போது, அதில், பொட்டலம், பொட்டலமாக சுமார் 23 கிலோ கஞ்சா இருந்தது.
இலங்கைக்கு கடத்தலா?
பின்னர் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி சுங்கத்துறையினர் அங்கு வந்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றபோது, யாராவது பார்த்ததால் இங்கே போட்டுவிட்டு சென்றார்களா? அல்லது இலங்கையில் இருந்து இங்கு கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com