60 மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகரில் 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
60 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

விருதுநகர்,

விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் இந்நகர் பஜார் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருத்தங்கல் முனியசாமி நகரை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 26), சாரதா நகரை சேர்ந்த முருகன் (55) ஆகிய இருவரும் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களையும், மதுவிற்ற ரூ.13,100-யும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com