

காரியாபட்டி,
நரிக்குடி அருகே கண்டு கொண்டான் மாணிக்கம் பகுதியில் நரிக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, போலீசார் விக்னேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவரிடம் அனுமதியின்றி 40 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் நத்தகுளத்தை சேர்ந்த பெரியண்ணன் (வயது 49 ) என்பது தெரியவந்தது. இதனையடுத்து நரிக்குடி போலீசார் 40 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.