ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபரை போலீசில் சிக்க வைத்த இளம்பெண்

சமூகவலை தளத்தில்ஆபாச படங்களை அனுப்பிதொல்லை கொடுத்த வாலிபரை இளம்பெண் ஒருவர் போலீசில் சிக்க வைத்த சம்பவம் பாந்திரா வில்நடந்துள்ளது.
ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபரை போலீசில் சிக்க வைத்த இளம்பெண்
Published on

மும்பை,

தானே, கல்யாண் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த துருமில் ஷா(20) என்ற வாலிபர் சமூகவலைதளம் மூலம் அறிமுகம் ஆனார். முதலில் வாலிபர் இளம்பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார்.

திடீரென அவர் இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுக்க தொடங்கினார். இளம்பெண் எச்சரித்தும் அவர் ஆபாச படங்கள் அனுப்புவதை நிறுத்தவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், அந்த வாலிபரை போலீசில் சிக்க வைத்து பாடம் புகட்ட விரும்பினார். எனவே அவர் சம்பவத்தன்று வாலிபரை பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதிக்கு வர சொன்னார். வாலிபரும் இளம்பெண்ணை சந்திக்கலாம் என்ற ஆசையில் பாந்திரா வந்தார்.

இந்தநிலையில் பாந்திரா சென்ற இளம்பெண் வாலிபர் அங்கு வந்திருப்பதை உறுதி செய்தார். பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இளம்பெண்ணுக்கு சமூகவலைதளத்தில் தொல்லை கொடுத்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com