குற்றாலம் சாரல் விழாவில் நீச்சல் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

குற்றாலம் சாரல் விழாவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குற்றாலம் சாரல் விழாவில் நீச்சல் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Published on

நெல்லை,

குற்றாலம் சாரல் விழாவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் குற்றாலத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி நடந்தது. குற்றாலம் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கணேசன், மேலகரம் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் லிங்கராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு 6 பிரிவுகளிலும், பெண்களுக்கு 4 பிரிவுகளிலும் போட்டி நடத்தப்பட்டது. இதில் பெண்கள் பொதுப்பிரிவில் தேவி மகராசி, 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுவிரிமி நாயர், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மகா சாலினி, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பினீயா ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர்.

ஆண்ககுக்கான பொதுப்பிரிவில் 100 மீட்டர் போட்டியில் பெனடிக் ரோகித், 50 மீட்டர் பொதுப்பிரிவில் கவுசிக், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் எபின், 50 மீட்டர் பிரிவில் தர்மேஷ் ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர்.

போட்டிகள் முடிவடைந்து கலைவாணர் கலையரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற நீச்சல் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சண்முகசுந்தரம், குற்றாலம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், தென்காசி அரசு வக்கீல் சின்னத்துரை பாண்டியன், ஊத்துமலை தொடக்க வேளாண்மை தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொம்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com