சொத்து வரி உயர்வை குறைக்க கோரி நகரசபை அலுவலகம் முற்றுகை

சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க. மற்றும் பா.ம.க.வினர் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சொத்து வரி உயர்வை குறைக்க கோரி நகரசபை அலுவலகம் முற்றுகை
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி நகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் ஏ, பி, சி, டி என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வரிவசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதிகள் ஏ, பி, சி என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வரி விகிதங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே வீடுகள், கடைகளுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரி, குடிநீர் வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியினர், கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். நகர செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.

மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் வினோத்குமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மகாராஜன், நகர தலைவர் ராஜபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், நகரசபை ஆணையாளர் அட்சயாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ம.தி.மு.க.வினரும் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நகர செயலாளர் பால்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், நகரசபை ஆணையாளர் அட்சயாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com