துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

துபாயில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு கடத்தி வந்த ரூ.22 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில், ராமநாதபுரத்தை சோந்த சையத் அபுதாகீர் (வயது 34), ராஜ் முகமது (37) ஆகிய 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் எதுவும் சிக்கவில்லை.

பின்னர் அவர்கள் 2 பேரையும், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, 2 பேரிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com