துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் வாலிபர் கைது.
துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்த போது, சென்னையை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

உடைமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று அவரை சோதித்ததில், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.40 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள 840 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com