தேசிய மாணவர் படையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி

தேசிய மாணவர் படையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி

பாளையங்கோட்டையில் தேசிய மாணவர் படையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடந்தது.
Published on

நெல்லை:

பாளையங்கோட்டையில் தேசிய மாணவர் படையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடந்தது.

தேசிய மாணவர் படை

தேசிய மாணவர் படை 5-வது தமிழ்நாடு பட்டாலியன் சார்பில், கடந்த 23-ந் தேதி முதல் நாளை (திங்கட்கிழமை) வரை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 12 கல்லூரிகளில் படிக்கும் தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) உள்ள மாணவ, மாணவிகளுக்கு பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் முகாம் நடந்து வருகிறது.

இந்த முகாமில் 250 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி உள்ளிட்டவை நடந்தது. 2-வது நாளன்று துப்பாக்கியின் வகையறிதல், அதன் இயக்கம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

துப்பாக்கி சுடுதல் பயிற்சி

நேற்று துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடந்தது. இதில் மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 5 குண்டுகள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட இலக்கை சுடுவதற்கு 5 முறை வாய்ப்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயுதங்களை கையாள்வது குறித்தும், அதன் தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள் குறித்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் லெப்டினன்ட் கர்னல் நிதிஷ்குமார், மேஜர் ராஜேஷ், சுபேதார்கள் போகலிங்கம், ஜஹாங்கீர், ராவல் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com