தாயை தாக்கிய மகன் கைது

தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
தாயை தாக்கிய மகன் கைது
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி அழகம்மாள்(வயது 55). கூலி தொழிலாளி. இவர்களது மகன் பச்சைமுத்து(36). விவசாயி. இவர் நேற்று மது அருந்திவிட்டு வந்து குடிபோதையில் அவரது தாய் அழகம்மாளிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகாத வார்த்தையால் திட்டி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அழகம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பச்சைமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com