குடும்ப பிரச்சினையில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது

தேனி அல்லிநகரத்தில் குடும்ப பிரச்சினையில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்.
குடும்ப பிரச்சினையில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
Published on

அல்லிநகரம்:

தேனி அல்லிநகரம், காந்திநகரை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 36). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சாந்தி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இதற்கிடையே சம்பவத்தன்று சாந்தியின் தாயார் புஷ்பம் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தகராறு குறித்து சூரியநாராயணனிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மாமியார் புஷ்பத்தை தாக்கினார்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புஷ்பம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூரியநாராயணனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com