குடும்பத்தகராறில் மாமனாரை அடித்து உதைத்த மருமகன் கைது

குடும்பத்தகராறில் மாமனாரை அடித்து உதைத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறில் மாமனாரை அடித்து உதைத்த மருமகன் கைது
Published on

திருவள்ளூரை அடுத்த மப்பேடு பாத்திமாபுரத்தை சேர்ந்தவர் ராஜன் என்கின்ற படையப்பா (வயது 24). இவரது மனைவி மரிய சோனி (21). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான படையப்பா சரிவர வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக மரிய சோனி கோபித்துக்கொண்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்று அவரிடம் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவியை அழைத்து வருவதற்கு படையப்பா சென்றார். ஆனால் அவரது மாமனார் தனது மகளை அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜன் தனது மாமனாரை தகாத வார்த்தையால் பேசி கையாளும் உருட்டுக்கட்டையாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் படையப்பாவை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com