10ம் தேதி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 10ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
10ம் தேதி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 10.2.2026, செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு குறைகள் நிவர்த்தி செய்திட தங்களது மனுக்கள் இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து, தொலைபேசி எண் குறிப்பிட்டு பயன்பெறலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com