பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

ஆலங்குளம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்புபூஜை நடந்தது.
பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தரராஜ பெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில், புலிப்பாரைபட்டி வரதராஜபெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகோபாலபெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com