புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடந்தது

புனித வெள்ளியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடந்தது
Published on

தர்மபுரி:

புனித வெள்ளியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புனித வெள்ளி அனுசரிப்பு

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகிறார்கள். அதன்படி நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட நிகழ்விலிருந்து உயிர்த்தெழுதல் வரையிலான 14 நிலைகளில் அவர் பட்ட துன்பங்களை நினைவு கூறும் வகையிலான சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தர்மபுரி பாரதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனையொட்டி தர்மபுரி பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் இருந்து 14 நிலைகளை நினைவுகூர்ந்த படி பேராலய மக்கள் பவனியாக வந்தனர். சிலுவையை ஒருவர் சுமந்த படியும், படை வீரர்கள் அவரை சவுக்கால் அடித்து கொண்டும் வந்தனர். 12-வது மலையாக அவர் உயிர் துறத்தலும், 14-வது நிலையாக அவர் உயிர்த்தெழுதல் வரை சிலுவைப்பாதை நடைபெற்றது. இந்த சிலுவைப்பாதை பவனி பாரதிபுரம் புதிய பேராலயத்தில் முடிவடைந்தது. அங்கு பங்குத்தந்தை அருள்ராஜ், உதவி பங்குத்தந்தை ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கோவிலூர்-செல்லியம்பட்டி

இதேபோன்று கோவிலூர் சவேரியார் ஆலயத்தில் பங்கு தந்தை ஏசுதாஸ் தலைமையிலும், செல்லியம்பட்டியில் பங்குத்தந்தை மதலைமுத்து தலைமையிலும், பூலாப்பட்டியில் பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் கேத்தனஅள்ளியில் பங்குத்தந்தை கென்னடி தலைமையிலும், பொம்மிடியில் பங்குத்தந்தை அந்தோணிசாமி தலைமையிலும், பி.பள்ளிபட்டியல் பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையிலும், தென்கரைக்கோட்டையில் பங்குத்தந்தை வினோத் தலைமையிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com