பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

முருகபவனம்:

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். மேலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வார நாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படுவதில்லை. இதையொட்டி பக்தர்கள் அனுமதி இன்றி புரட்டாசி மாதத்தின் 2&வது சனிக்கிழமையான நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 7 மணியளவில் சாமிக்கு பால், பழம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் விளக்கேற்றி வழிபட்டு சென்றனர்.

இதேபோல் திண்டுக்கல் எம்.வி.எம். நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி பெருமாள் கோவிலில் சாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் புரட்டாசி மாத 2&வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com