ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி தீவிர வாக்கு சேகரிப்பு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி தீவிர வாக்கு சேகரிப்பு
Published on

சோமரசம்பேட்டை,

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி நேற்று காலை காட்டழகிய சிங்க பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அடிமனை பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும், காவிரியில் தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் தொகுதி மேம்பாட்டிற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறினார். வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வாக்கு சேகரிப்பின்போது, வேட்பாளருடன் தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com