எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தராக முத்தமிழ் செல்வன் நியமனம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தராக முத்தமிழ் செல்வன் நியமனம்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தராக முத்தமிழ் செல்வன் நியமனம்
Published on

சென்னை,

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சி.முத்தமிழ் செல்வன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். துணைவேந்தராக பதவியேற்றுக் கொண்ட முத்தமிழ் செல்வன், பேராசிரியராக பணியை தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

இவர் தனது பணிக்காலத்தில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர் முத்தமிழ் செல்வனுக்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர், இணைவேந்தர்கள், பதிவாளர், பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com