ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி டாக்டர்கள், 10 நர்சுகளுக்கு கொரோனா

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 13 பயிற்சி டாக்டர்கள் மற்றும் 10 நர்சுகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி டாக்டர்கள், 10 நர்சுகளுக்கு கொரோனா
Published on

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 13 பயிற்சி டாக்டர்கள் மற்றும் 10 நர்சுகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி டாக்டர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 பயிற்சி டாக்டர்கள் மற்றும் 10 நர்சுகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com