மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் 6 மாதங்களாக வேலை செய்து வந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
Published on

படப்பை,

அசாம் மாநிலம் உஜாய் மாவட்டம் பர்கர் கிராமத்தை சேர்ந்தவர் ரனுச்சுடின் (வயது 22), இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் 6 மாதங்களாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதனை அறிந்த உடன் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com