அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
Published on

கரூர்

தாந்தோணிமலை ஒன்றியம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021-22-ம் கல்வி ஆண்டின் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பராசக்தி, வட்டார கல்வி அலுவலர் ரமணி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்து, மாணவ-மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்கினர். இதில், பள்ளி தலைமையாசிரியர் சுமதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கான பாடநூல்கள், உளர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கண்மணி தலைமை தாங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர் ரமணி கலந்து கொண்டு புதிய மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com