

நாகர்கோவில்,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்து, உத்தரபிரதேச மாநில போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், அதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பர்சின் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் சாகுல்அமீது வரவேற்று பேசினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்சார் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் அகமது நன்றி கூறினார்.