கள்ளக்குறிச்சியில் திடீர் மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சியில் திடீர் மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் அவதி
கள்ளக்குறிச்சியில் திடீர் மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் அவதி
Published on: 

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் மாலை 5 மணியளவில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இரவு 8.15 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 45 நிமிடம் பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் சேலம் மெயின்ரோடு, கடைவீதி, கவரைத்தெரு, கணக்குபிள்ளை தெரு, பாலகிருஷ்ணன் நாயுடு தெரு உள்பட பெரும்பாலான தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் இரண்டற கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com