வாழப்பாடி அருகே மலைப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

வாழப்பாடி அருகே மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீப்பற்றி எரிந்தது.
வாழப்பாடி அருகே மலைப்பகுதியில் திடீர் காட்டுத்தீ
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே உள்ள கவர்க்கல்பட்டி பகுதியில் அமைந்த முஸ்தோப்பு கரடு என்னும் மலைப்பகுதியில் நேற்று தீடீரென்று காட்டுத்தீ பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மள,மளவென்று பரவியது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்திற்கு சென்று அருகில் ஏதேனும் குடியிருப்புகள் உள்ளதா? என ஆய்வு செய்தார். அருகில் பொது மக்கள் குடியிருப்பு ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திய தாசில்தார் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தீயை அணைக்க வழியில்லாததால் தொடர்ந்து நள்ளிரவு வரை எரிந்து கொண்டிருந்தது. இதில் மலைப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகின.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com