அ.தி.மு.க. நிர்வாகி அரளி விதையை தின்று தற்கொலை

விபத்தில் படுகாயம் அடைந்த அ.தி.மு.க. நிர்வாகி அரளி விதையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
அ.தி.மு.க. நிர்வாகி அரளி விதையை தின்று தற்கொலை
Published on

குளித்தலை

குளித்தலை சபாபதி நாடார் தெரு வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 58). சலவை தொழிலாளியான இவர் அ.தி.மு.க. வார்டு செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயம் அடைந்த சக்திவேல் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை தின்றுள்ளார்.

இதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com