தீக்குளித்து வாலிபர் தற்கொலை

சங்கராபுரம் அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டா.
தீக்குளித்து வாலிபர் தற்கொலை
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் திலீபன்(வயது 27). இவர், வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திலீபன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com