தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தாய் வேலைக்கு போக சொல்லி திட்டியதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் ஆந்திராவில் பொக்லைன் எந்திர டிரைவராக உள்ளார். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள்.

மகன் விக்னேஷ் (வயது 24) பி.எஸ்சி. படித்து முடித்து விட்டு கடந்த 2 வருடமாக வேலை செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று விக்னேசை அவரது தாய் ஏதாவது வேலைக்கு போக சொல்லி திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை (எலி மருந்து) குடித்து விட்டு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அவரது தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com