தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

பேரளம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

நன்னிலம்:

காஞ்சீபுரம் மாவட்டம் தேக்காடி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வராஜ்(வயது24). இவர் அறுவடை எந்திர டிரைவர். இவர் நேற்று திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் நெல் அறுவடைக்காக வந்துள்ளார். அப்போது இரவு யாரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள ஒரு மரத்தில் செல்வராஜ் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜ் தனது உறவினர் பெண் ஒருவரை காதலித்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க செல்வராஜ் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்பதும், இதனால் விரக்தி அடைந்த செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் உறவினர் செல்வம் பேரளம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com