இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

லாலாப்பேட்டை

லாலாபேட்டை வைத்திய நகரை சேர்ந்தவர் பிரகாஷ், கூலித்தொழிலாளி. இவருக்கும் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரேணுகாவுக்கும் (வயது 24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரேணுகா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேணுகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com