ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன காடை உற்சவம்

மாசி மகத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன காடை உற்சவம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன காடை உற்சவம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மாசி மகத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன காடை உற்சவம் நடைபெற்றது.

ஆண்டாள் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன கொடை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று மாசி மகத்தையொட்டி அன்ன கொடை உற்சவம் நடைபெற்றது. இதற்காக 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு மதியம் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சர்வ அலங்காரம்

அன்ன கொடை நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் தயிர் சாதம் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டது.

அன்ன கொடை உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com