4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன
4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மூடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடிய பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் அமைந்து உள்ள 89 டாஸ்மாக் கடைகள் வருகிற 17, 18, 19 மற்றும் 22-ந் தேதிகளில் மூடப்படுகின்றன. அதே போன்று எப்.எல்.2, எப்.எல்.3 உரிம தலங்களில் அமைந்து உள்ள மதுபான பார்கள் மூடப்படுகிறது.

நடவடிக்கை

இந்த நாட்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுயைன குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com