இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

மானூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

நெல்லை:

மானூர் அருகே உள்ள அளவந்தான்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகள் மேரி ஷாலினி (வயது 25). இவர் சம்பவத்தன்று அளவந்தான்குளம் அருகே திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேரி ஷாலினி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com