கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடையம்,

கடையம் அருகே மேட்டூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானபிரவீன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லூர்து அந்தோணி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் லூர்து அந்தோணியின் வயிற்றில் கட்டி இருந்ததால், அவர் தீராத வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் போலீசார் விரைந்து சென்று, தற்கொலை செய்த லூர்து அந்தோணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com