மயிலாப்பூரில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

மயிலாப்பூரில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாப்பூரில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
Published on

சென்னை மயிலாப்பூர், நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது 19). இவருடைய கணவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த மெரினா போலீசார், சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுவாதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாதிக்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் இதுபற்றி கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com