இளம்பெண் தற்கொலை

நெல்லையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தற்கொலை
Published on

பேட்டை:

நெல்லை டவுன் கோடீசுவரன் நகரை சேர்ந்தவர் தாளமுத்து. தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி நிறைமதி (வயது 28). இவர்களது மகன் டியூசன் படிக்க பணம் கொடுப்பது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நிறைமதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னா அவர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com