இளம்பெண் தற்கொலை முயற்சி; கணவர் மீது வழக்கு

இளம்பெண் தற்கொலை முயற்சி செய்தார். அவருடைய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண் தற்கொலை முயற்சி; கணவர் மீது வழக்கு
Published on

கோவை

கோவை பீளமேடு உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் வீரஜோதி (வயது 24). சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் குணசேகரன் (27). இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அப்போது வீரஜோதிக்கு பெற்றோர் 15 பவுன் மற்றும் சீர்வரிசை கொடுத்தனர். இந்தநிலையில் வீரஜோதியின் தங்கைக்கு திருமணம் நிச்சயமானது.

இதை அறிந்த குணசேகரன், தனக்கு தருவதாக கூறிய 10 பவுன் நகையை தர வேண்டும் என்று கேட்டு வீரஜோதியை கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதனால் அவர், கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகும் நகை குறித்து போனில் கேட்டு குணசேகரன் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வீரஜோதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் குணசேகரன் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com