இளம்பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இளம்பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே கருங்காடு பகுதியை சேர்ந்த முருகைய்யாவின் மகன் மலையாண்டி (வயது 23). இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலையாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மலையாண்டிக்கு 10 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட மலையாண்டியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com